Wednesday, 28 August 2013

Aadhalal kadhal seiveer - Movie Review (in Tamil)

ஆதலால் காதல் செய்வீர்! 
------------------------------------------
Review by Prabhu Balasubramani (Mail: expert.prabhu@gmail.com)



யதார்த்த வாழ்வுகளின் பிம்பங்களை தன் கதையின் மூலமாய் உயிர் கொடுத்து வெண்ணிலா கபடி குழு,நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை என தனது படைப்புகள் மூலமாய் அவற்றை மக்கள் மனதில் பதிய வைத்த இயக்குனர் சுசீந்திரனின் இன்னொரு அழுத்தமான படைப்பு "ஆதலால் காதல் செய்வீர்". 

இந்த முறை அவர் கையில் எடுத்திருக்கும் கதை கரு இன்றைய காதலின் குறும்புகளும் தலும்புகளும்.

கார்த்தியும் (சந்தோஷ்) ஸ்வேதாவும் (மனிஷா) கல்லூரி நண்பர்கள். அவர்கள் நண்பர் கூட்டத்தின் கூத்துக்களுடனும் கும்மாலங்களுடனும் நகர தொடங்கி.. கார்த்தி ஸ்வேதாவை ஒரு தலையாய் காதலிக்க  அதற்கு நண்பர்கள் கொடுக்கும் யோசனைகளும் ,அப்பாவிடம் அடம் பிடித்து  பைக் வாங்குவது தொடங்கி பேருந்தில் இருந்து குதித்து ஸ்வேதாவின் அனுதாபம் பெற்று காதலை கனிய வைக்கும் வரை காமெடியாகவும் காதலாகவும் மிதமாக நகரும் கதை.... அவர்களின் காதல் கரை தாண்டி காமம் தொட்டு எல்லை மீறிடும் போது சட்டென வேகம் பிடிக்கிறது. காதல் என்ற மாய உலகிலிருந்து தள்ளப்பட்டு யதார்த்த வாழ்வின் சூழ்நிலைகளால் அவதிப்படும் காதலர்கள்.. தங்கள் காதலை குடும்பம் கௌரவம் என  சமூகத்தின் விழிகளால் பார்க்க தொடங்கும் தருணத்தில் ஏற்படும் குழப்பங்களையும் நிகழ்வுகளையும் அழகாய் கோர்த்து இதயம் கனக்க கதையை முடித்திருக்கிறார் இயக்குனர்...

யுவனின் இசை கதைக்கு உயிர் சேர்க்கிறது.குறிப்பாக கடைசி பாடல் காதுகளில் நுழைந்து , கண்களில் தவழ்கிறது கண்ணீராக.. 






நாயகன் சந்தோஷ் கதையின் நாயகனாக வலம் வருகிறார். திரைக்கதை நகர நகர அவரது நடிப்பும் நம் கவனம் ஈர்க்கிறது..  

நாயகி மனிஷா விற்கு வழக்கு எண் 18/9 படத்தினை போலவே இந்த படத்திலும் வலுவான கதாபாத்திரம். அதனை அழகாய் உள்வாங்கி அற்புதமாய் பிரதிபலித்திருகிறார்.. அம்மாவிடம் பொய் சொல்லி தப்பிக்கும் இடங்களிலும் சரி.. காதலுடன் சண்டையிடும் இடங்களிலும் சரி.. மிக நேர்த்தியாக நடித்துள்ளார்..

'காதலில் சொதப்புவது எப்படி' அர்ஜுன் வரும் இடங்களில் கலகலப்பு.. கை தட்ட வைக்கிறது.. 

கார்த்திக்கின் தந்தையாக நடித்திருக்கும் ஜெய பிரகாஷ் சராசரி நடுத்தர வர்க்கத்து தந்தையின் அத்தனை உணர்வுகளையும் அழகாய் வெளிப்படுத்தி கதைக்கு கணம் சேர்த்திருக்கிறார்..

திரைக்கதையை மிக நேர்த்தியாக செதுக்கி.. இறுதி காட்சியில் தன் முத்திரை பதித்து மீண்டும் தன்னை சிறந்த இயக்குனராய் நிரூபித்திருக்கிறார் சுசீந்திரன்...

ஆதலால் காதல் செய்வீர் ! ஆதலால் காதல் மட்டும் செய்வீர்!


Rating - 7/10
Review by Prabhu Balasubramani (Mail: expert.prabhu@gmail.com)


4 comments:

  1. Prabhu... romba nalla ezhuthirukkinga! :) I liked the movie even.
    Oru chinna correction... actor Jaya Prakash was Swetha's father in this movie... :)

    Keep your reviews coming! :)

    ReplyDelete
  2. really super review. this movie should be watched by all parents and youngsters.

    ReplyDelete
  3. Superb review Prabhu... Keep rocking...

    ReplyDelete
  4. நன்றாக இருந்தது, மதிப்பீடு!.
    ஆதலால் காதல் செய்வீர் ! ஆதலால் காதல் மட்டும் செய்வீர் !
    இது என்ன மதுரை காரன் குசும்பு தான...

    ReplyDelete

Please enter your comments